BREAKING NEWS
latest

Friday, February 5, 2021

அமீரகத்தில் மூடுபனி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை 500 திர்ஹம் அபராதம் அரசு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது

அமீரகத்தில் மூடுபனி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை 500 திர்ஹம் அபராதம்;அரசு புதிய தடை உத்தரவை அறிவித்துள்ள நிலையில் அரசு ஏஜென்சி இதை செய்தியாக வெளியிட்டுள்ளது

Image credit : Official Soure

அமீரகத்தில் மூடுபனி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை 500 திர்ஹம் அபராதம் அரசு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகம் இன்று(05/02/21) வெள்ளிக்கிழமை பனிமூட்டத்தின் போது கனரக வாகனங்களுக்கு புதிய தடை உத்தரவை அறிவித்து செய்தி வெளியிட்டுள்ளது. இது தொட‌ர்பாக பனிமூட்டமான காலநிலையில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பதாக ஷார்ஜா போலீசார் அறிவித்துள்ளனர். இந்த விதியை மீறி நகரத்தின் சாலைகளில் தொடர்ந்து ஓட்டிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள்(Black Points) வழங்கபடும். பொதுமக்கள் உயிர் மற்றும் நாட்டின் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் ,போக்குவரத்து விதிகள் தொடர்பான நடைமுறை மேம்படுத்துவதற்கும் சம்மந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஷார்ஜா போலிசார் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளின் ஓட்டுநர்களுக்கு பனிமூட்டமான காலநிலையின் போது இந்தவகை வாகனங்களை இயக்குவது தவிர்த்து போக்குவரத்து சட்டத்தை முழுமையாக கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்தது.ஓட்டுநர்கள் தங்கள் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், உங்களை போன்று சாலையில் செல்லும் மற்ற ஓட்டுநர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதற்கிடைய இன்று அதிகாலை அபுதாபி முழுவதும் கடுமையான பனிமூட்டமான காட்சியளித்தது. வெப்பநிலை 6.6°C அளவில் பதிவானது. குறிப்பாக Raknah யின் Al-Ain பகுதிகளில் அதிகமாக மூடுபனி நிலவியது குறிப்பிடத்தக்கது.

Add your comments to அமீரகத்தில் மூடுபனி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை 500 திர்ஹம் அபராதம் அரசு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »