அமீரக குடியுரிமை பெறும் இந்தியர்களுக்கு,இந்திய குடியுரிமை பறிபோகும்;சட்ட வல்லுனர்கள் கூற்றுப்படி 90 நாட்களில் இந்திய குடியுரிமை ரத்தாகும்
Image:Dubai
அமீரக குடியுரிமை பெறும் இந்தியர்களுக்கு,இந்திய குடியுரிமை பறிபோகும்
அமீரக அரசு இரண்டு நாடுகளுக்கு முன்பு வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்ததை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்திய சட்ட வல்லுனர்கள் கூற்றுப்படி அமீரக குடியுரிமை பெறும் ஒரு இந்தியர் அந்நாட்டின் குடியுரிமை பெற்று 90 நாட்களில் இந்திய குடியுரிமை ரத்தாகும்,அதாவது அவர்களுடைய இந்திய பாஸ்போர்ட் தானாக ரத்தாகும். இதற்கு காரணமான இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, இதுவரையில் இரட்டை குடியுரிமைக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கிகாரம் வழங்கியதில்லை.
மேலும் இதற்கு பிறகு இப்படிப்பட்ட நபர்கள் வெளிநாட்டினர் இந்தியாவில் வருவதற்காக கடைபிடிக்கும் விசா உள்ளிட்ட அனைத்து இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே இந்தியாவில் நுழைய முடியும். ஆனால் இப்படிப்பட்ட நபர்கள் OCI அட்டைக்காக விண்ணப்பித்து பெறமுடியும், இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் இந்திய வந்துச் செல்ல முடியும். இந்த அட்டை கைவசம் இருந்தால் நீங்கள் வந்துசெல்லும் தகவலை நீங்கள் செல்லும் பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இதுபோல் விவசாய நிலம் மற்றும் பெரிய தோட்டங்கள் தவிர்த்து தங்குவதற்காக இடம் மற்றும் வணிக தொடர்பான இடங்கள் வாங்குவதற்கு இவர்களுக்கு உரிமை உண்டு, இதுபோல் கல்வி உள்ளிட்டவை பெறுவதற்கு, இந்திய NRI நபர்களை போன்று இவர்களுக்கும் உரிமை உண்டு,மேலும் மருத்துவ படிப்பு உள்ளிட்டவைக்கு தேர்வுகளில் கலந்து கொள்ள முடியும், இவர்களுக்கு வழங்கபடும் OCI கார்டுகள் அடையாள அட்டையாக கணக்கிடப்படும். அதே நேரத்தில் ஓட்டுரிமை கிடையாது மற்றும் தேர்தல்களில் போட்டியிட முடியாது. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், தலைமை நீதிபதி உள்ளிட்ட பதவிகளை இவர்கள் பெற முடியாது. இவர்களுக்கு அரசு வேலையும் பெறுவதற்கு தகுதி கிடையாது.
ஆனால் இரு நாடுகளின் உரிமைகள் பயன்படுத்த அனுமதியுள்ள நாடுகளை சேர்ந்த நபர்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் குடியுரிமை பெறுவதில் பிரச்சினை இல்லை ஆனால் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை இழந்தால் மட்டுமே அமீரக குடியுரிமை பெற முடியும். அதுவும் அமீரகம் அறிவித்துள்ள பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இதை பெற முடியும்.