சவுதியில் விசா புதுப்பிக்கவில்லை என்றால் 3 நாட்கள் வரையில் அபாரதம் செலுத்த வேண்டியது இல்லை;ஜவாசத் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது
Image : Sample Visa Copy
சவுதியில் விசா புதுப்பிக்கவில்லை என்றால் 3 நாட்கள் வரையில் அபாரதம் செலுத்த வேண்டியது இல்லை
சவுதியில் 3 நாட்களுக்குப் பிறகுதான் இகாமா காலாவதி ஆக நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், அதுபோல் வீட்டுத் தொழிலாளர்களுக்கான இகாமா காலாவதியாக 14 மாதங்கள் உள்ள நிலையிலும் புதுப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ளன புதிய செய்தி அடிப்படையில் காலவதியான இகாமா கைவசம் உள்ள வெளிநாட்டவர்கள் மூன்று நாட்களுக்குள் தங்கள் இகாமாவை புதுப்பிக்காவிட்டால் அபராதம் கிடையாது,ஆனால் மூன்று நாட்களுக்கு பிறகு அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி ஜவாசத் அறிவித்துள்ளது.
இதுபோல் வீட்டுத் தொழிலாளர்களுக்கான இகாமா காலவதி 14 மாதங்கள் மீதியுள்ள நிலையிலும்,மீண்டும் புதுப்பிக்கலாம் என்று ஜவாசத் கூறினார். அதே நேரத்தில், மற்ற தொழில்களில் உள்ள இகாமாக்கள் ஆறு மாதங்கள் விசா காலவதி உள்ள நிலையில் மட்டுமே புதுப்பிக்க முடியும். இகாமாவைப் புதுப்பிப்பதில் முதல் முறையாக தாமதத்திக்கும் நகருக்கு 500 ரியால் அபராதமும், இரண்டாவது முறையாக இதே தவறை செய்தால் 1000 ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் என்றும் ஜவாசத் அறிவித்துள்ளது.