குவைத்தில் போதைமருந்து கும்பலின் சூழ்ச்சியில் சிக்கிய இந்தய இளைஞன்; உண்மையினை கண்டறிய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது
குவைத்தில் போதைமருந்து கும்பலின் சூழ்ச்சியில் சிக்கிய இந்தய இளைஞன்;விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது
குவைத்தில் வேலைக்காக வந்த இந்திய இளைஞர் போதைமருந்து கும்பலின் சூழ்ச்சியில் சிக்கி தண்டனை பெற்றுவருகின்ற நிலையில் இதன் உண்மை நிலை குறித்து விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொச்சியின் நாயரம்பலம் பகுதியைச் சேர்ந்த ஜோமோன் என்ற இளைஞர்,குவைத் விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஜோமோனின் தந்தையின் வேண்டுகோளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2018 ஜனவரியில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஜோமோன் குவைத் விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.ஜோமோன் குவைத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலைக்கு வந்தார். வேலைக்காக விசா எடுத்து வழங்கிய அந்தோணி என்ற நபர்,கொச்சி விமான நிலையத்தில் வைத்து குவைத் கிளம்பிய நேரத்தில் ஜோமோனிடம் ஒரு பையை ஒப்படைத்தார். மேலும் அவர் வேலைக்குச் செல்லும் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள வேறொரு ஊழியரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். வேலை வாங்கி கொடுத்த நபர் என்ற நம்பிக்கையில் ஜோமோன் பையை குவைத்திற்கு எடுத்து வந்தார். இதையடுத்து குவைத் விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் பையில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் ஜோமோன் கைது செய்யப்பட்டார்.
ஜோமோன் தான் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தில் கூரிய போதிலும் தனக்கு சாதகமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாத நிலையில், குவைத் நீதிமன்றம் குற்றவாளியாக தீர்மானித்து ஆயுள் தண்டனை விதித்தது. ஜோமனின் தந்தை கிளெட்டஸ் இந்த மோசடியை உணர்ந்து அந்தோனிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார்.காவல்துறை அதிகாரிகள் சிலரை கைது செய்த போதிலும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மத்திய அரசும் ஜோமோன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஏதேனும் ஆவணங்கள் இருந்தால்குவைத் அரசாங்கம் அவருக்கு மன்னிப்பு அளிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த சூழலில்தான் கிளீட்டஸ் நீதிமன்றத்தை அணுகினார். போதைப்பொருள் கடத்தல் குறித்து விசாரிப்பதன் மூலம் உண்மை வெளிவராவிட்டால் வளைகுடா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் அதிக இளைஞர்கள் இதுபோல் ஏமாற்றப்படுவார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் அவர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிபதி விஜி அருண் சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவுக்கு இன்று உத்தரவிட்டார்.