குவைத்தில் நாளை முதல் பகுதிநேர ஊரடங்கு;விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 தினார் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை
Image : Kuwait Salmiya Road
குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு;10,000 தினார்கள் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை
குவைத்தில் நாளை(07/03/21) மாலை 5 மணி முதல் ஒரு பகுதிநேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும். இதையடுத்து ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரவு இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர். ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் பொதுமக்கள் பொதுவெளியில் நடக்கவோ அல்லது சைக்கிள் பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் மக்கள் கூட்டத்தைத் தடுக்க சிறப்பு பாதுகாப்பு வீரர்கள் கொண்ட குழுக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடைய ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10,000 தினார்கள் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.