குவைத்தில் 23 பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது;இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது
Image : KuwaitCity Road
குவைத்தில் 23 பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
குவைத்தில் நாளை(07/03/31) மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான பகுதிநேர ஊரடங்கு நடைமுறையில் வருகின்ற நிலையில்(இந்த புதிய உத்தரவு முதல்கட்டமாக ஒருமாத காலம் நடைமுறையில் இருக்கும்). 23 துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
- சுகாதரத்துறை ஊழியர்கள்.
- நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல், உதவி அட்டர்னி ஜெனரல், பொது வழக்கு விசாரணைக்காக இயக்குநர்கள், மக்கள் பிரதிநிதிகளின் வழக்கறிஞர்கள்.
- அமைச்சர்கள்,தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் மற்றும் தேசிய சட்டமன்ற உறுபினர்கள்.
- குவைத் இராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள்.
- சாலை பராமரிப்பு மற்றும் சாலை போக்குவரத்து ஆணையத்துடன் ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், துப்புரவு நிறுவனங்களின் திட்ட மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்
- குவைத் நகராட்சியுடன் ஒப்பந்தங்கள் அடிப்படையில் சுத்தம் செய்யும் நிறுவன தொழிலாளர்கள்,துப்புரவு ஊழியர்கள்.
- கல்லறை தோட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சலவை கடைகளின் ஊழியர்கள்.
- கூட்டுறவு சங்கங்களுக்கு உணவு பொருட்கள்,காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அனைத்து வழக்கும் சப்ளையர்களும், அப்தலி மற்றும் வப்ரா பண்ணைகளிலிருந்து காய்கறிகளையும், பழங்களையும் கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு வருகின்ற தொழிலாளர்கள்.
- சந்தைப்படுத்தல் சேவைகளுக்கான வேஃபர் நிறுவன தொழிலாளர்கள், குவைத் Milk & Flour மற்றும் பேக்கரிகள் நிறுவனம், குவைத் கேட்டரிங் நிறுவனம் ஊழியர்கள்
- அனைத்து மாகாணங்களிலும் உள்ள நீர் வழங்குதல் நிலையங்களின் ஊழியர்கள்
- அரசு நிறுவனங்களால் ஒப்பந்தம் செய்யப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவன தொழிலாளர்கள்.
- சாலைகள் மற்றும் போக்குவரத்துக்கான பொது அமைச்சகம் ஊழியர்கள், பொதுப்பணித்துறை அமைச்சகம் பொது ஆணையத்தின் பொறியாளர்கள்.
- நீர் மற்றும் மின்சார துறையின் அமைச்சக ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்
- குவைத் துறைமுகக்கழகத்தின் தொழிலாளர்கள்
- குவைத் ஏர்வேஸ் தொழிலாளர்கள், விமானிகள்,விமான உதவியாளர்கள் ,பொறியாளர்கள் மற்றும் தரை சேவை வழங்கும் ஊழியர்கள்.
- குவைத் விமான நிலைய சிவில் ஏவியேஷன் ஊழியர்கள் மற்றும் விமானத்துறை தொழிலாளர்கள் தரை சேவைகளுக்கான பொது நிர்வாக ஊழியர்கள்.
- சுரங்கத்துறை பொது நிர்வாகம் (பாதுகாப்பு பார்கோடு ஐடியை வைத்திருப்பவர்கள்).
- நீண்டகால நோய் வாய்பட்ட நபர்கள் மற்றும் அவசரகால சுகாதார உதவி தேவைப்படும் நபர்கள்.
- தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும்
- இறக்குதல், கப்பல் போக்குவரத்து மற்றும் சுங்க அனுமதிகளுக்காக துறைமுகங்களில் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள்
- ஜசீரா ஏர்வேஸ் தொழிலாளர்கள்,விமானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தரை சேவை வழங்கும் ஊழியர்கள்
- விமான நிலையத்திற்கு பயணிகள் புறப்பட்டு வருகின்ற நேரத்தில் பயணிகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
- இமாம்கள் மற்றும் முஆதின்ஸ் அங்கீகரிக்கப்பட்ட பணி தொடர்பான அடையாள அட்டை உள்ளவர்கள். ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.