குவைத்தை விட்டு கடந்த மூன்று மாதங்களில் 7,853 வெளிநாட்டவர்கள் வெளியேறியுள்ளனர்; மொத்தமாக 65 நாட்களுக்குள் 26,562 விசாக்கள் ரத்தாகி உள்ளது
குவைத்தை விட்டு கடந்த மூன்று மாதங்களில் 7,853 வெளிநாட்டவர்கள் வெளியேறியுள்ளனர்
குவைத்தை விட்டு கடந்த மூன்று மாதங்களில், ஆதாவது ஜனவரி-12 முதல் மார்ச்-20 வரையிலான 65 நாட்களுக்குள் 26,562 விசாக்கள் ரத்தாகி யுள்ளது.7,853 வெளிநாட்டவர்கள் தங்கள் விசாக்களை ரத்து செய்து வெளியேறியுள்ளனர். மேலும் இதே காலகட்டத்தில் 17,155 பேரின் வேலை அனுமதி பத்திரம்(Work Permit) காலாவதியான நிலையில் நாட்டிற்கு வெளியே உள்ள காரணத்தால் ரத்து செய்யப்பட்டது என்றும், அதுபோல் 977 தொழிலாளர்கள் மரணமடைந்த காரணத்தால் வேலை அனுமதி பத்திரம் ரத்தாகி உள்ளதாகவும் மனிதவள பொது ஆணையம் தெரிவித்துள்ளது. அதுபோல் 199 அரசு ஊழியர்களும், குடும்ப விசாக்களில் 1,048 பேரும் தனியார் துறைக்கு தங்களின் வேலை பத்திரம்(Work Permit) மாற்றியுள்ளனர். இதுபோல் 557 பேர் தங்கள் விசாக்களை குடும்ப விசாவுக்கு மாற்றியுள்ளனர்.
இதை காலத்தில் 18,858 நபர்களின் சான்றிதழ்கள் மனிதவள பொது ஆணையத்தின் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தானியங்கி அமைப்பு மூலம் சரிபார்த்து அங்கீகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 181,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பணி அனுமதி புதுப்பிக்கப்பட்டது எனவும், புதிதாக 735 பணி அனுமதி பத்திரங்களுக்கு மனிதவள ஆணையம் அனுமதி வழங்கியது எனவும்,இதில் 459 நபர்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.