BREAKING NEWS
latest

Saturday, March 20, 2021

குவைத்தில் குழந்தை நீரில் மூழ்கி பலி;தந்தையின் குற்றச்சாட்டுக்கு இடையே விசாரணைக்கு பிறகு பணிப்பெண் விடுவிக்கப்பட்டார்

குவைத்தில் குழந்தை நீரில் மூழ்கி பலி;தந்தையின் குற்றச்சாட்டுக்கு இடையே விசாரணைக்கு பிறகு பணிப்பெண் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் குழந்தை நீரில் மூழ்கி பலி;தந்தையின் குற்றச்சாட்டுக்கு இடையே விசாரணைக்கு பிறகு பணிப்பெண் விடுவிக்கப்பட்டார்

குவைத்தின் Mubarak Al-Kabeer Governorate-க்கு உள்ளிட்ட அதான் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை(குவைத் குழந்தை) குளியலறையில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவசரகால கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதையடுத்து சம்பவம் நடந்த வீட்டிற்கு அதிகாரிகள் வந்தபோது குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அதான் மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையில் கணவன்,அவரது மனைவியும் வீட்டின் ஹாலில்(Hall) இருந்ததாகவும், திடிரென குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு வேலைக்காரி வந்ததாகவும், அவள் வீட்டின் குளியலறையின் குளியல் தொட்டியில் விழுந்து விட்டதாகவும்கூறியதால், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து பணிப்பெண் குழந்தையை கொலை செய்ததாக தந்தை குற்றம் சாட்டினர்,பணிப்பெண் எத்தியோப்பியா நாட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து துப்பறியும் அதிகாரிகள் வீட்டிற்குச் சென்று சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர், அதில் 60 செ.மீ ஆழத்தில் ஒரு பிளாஸ்டிக் கொள்கலன் மட்டுமே இருந்தது, உடனடியாக அவர்கள் பணிப்பெண்ணை காவலில் எடுத்து விசாரணைக்கு உட்படுத்தினர்,அதில் பணிப்பெண்ணுக்கு இந்த குழந்தையின் மரணத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. குழந்தை பிளாஸ்டிக் வாளியில் தலைகுப்புற விழுந்து மூழ்கிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது எனவும், இதையடுத்து பாதுகாப்பு வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தியில் பணிப்பெண் விடுவிக்கப்பட்டார் எனவும்,குழந்தை நீரில் மூழ்கி இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது, உடல் தடயவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

Add your comments to குவைத்தில் குழந்தை நீரில் மூழ்கி பலி;தந்தையின் குற்றச்சாட்டுக்கு இடையே விசாரணைக்கு பிறகு பணிப்பெண் விடுவிக்கப்பட்டார்

« PREV
NEXT »