கத்தார் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு இடையேயான பெரிய விபத்து 30 விநாடிகளில் தவிர்க்கப்பட்டது என்று Air Accident Investigation Bureau இந்திய சிவில் விமான ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
கத்தார் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு இடையேயான பெரிய விபத்து 30 விநாடிகளில் தவிர்க்கப்பட்டது
இந்தியாலில் கடந்த 2020 ஆகஸ்ட் 28 அன்று மாலை 4 மணியளவில் பெங்களுரிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் மற்றும் தோஹாவிலிருந்து புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் ஆகியவை கொச்சியில் தரையிறங்க முயன்றபோது இந்த இரு விமானங்கள் மோதி நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று தற்போது தெரியவந்துள்ளது. விபத்து நடக்கவிருந்த நேரத்தில், இரண்டு விமானங்களுக்கும் இடையிலான உயர வேறுபாடு வெறும் 498 அடி மற்றும் தூரம் 2.39 நாட்டிகல் மைல்கள், அதாவது 4.43 கிலோமீட்டர் எனவும்,மோதலுக்கு 30 வினாடிகளுக்கு குறைவாகவே நேரம் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதை கண்டறிந்த விமான நிலைய கட்டுபாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் தன்னுடைய உயரத்தை 3512 அடியாக குறைத்து விபத்தில் இருந்து தப்பியது தெரியவந்துள்ளது. விமானிகளுக்கு தரையிறங்க இரண்டாவது மற்றும் இறுதித் தீர்மான ஆலோசனை வழங்கப்பட்டபோது ஸ்பைஸ்ஜெட் 4,000 அடியிலும், கத்தார் ஏர்வேஸ் 4,498 அடியிலும் இருந்தது எனவும். ஸ்பைஸ் ஜெட் விமானம் உடனடியாக தங்கள் உயரத்தை அதாகரிக்கவோ அல்லது குறைக்கவோ அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரனை அறிக்கையின்படி, ஸ்பைஸ்ஜெட் விமானிகள் கொச்சியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை எனவும், விமான நிலையத்தில் தரையிறக்கும்போது அவர்கள் தரையிறங்க வேண்டிய உயரத்தை முன்கூட்டியே அமைக்க(Set) மறந்துவிட்டார்கள். எனவும் ஸ்பைஸ்ஜெட் விமானிகள் குற்றவாளிகள் என்று Air Accident Investigation Bureau இந்திய சிவில் விமான ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை தெரிவித்து உள்ளனர். விபத்து தவிர்க்கப்பட்ட நேரத்தில் இரண்டு விமானங்களிலும் சேர்த்து 300 ற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.