BREAKING NEWS
latest

Wednesday, March 3, 2021

குவைத்தின் Rumaithiya பகுதியில் இன்று இந்தியர் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்

குவைத்தின் Rumaithiya பகுதியில் இன்று மாலையில் இந்தியர் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தின் Rumaithiya பகுதியில் இன்று இந்தியர் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்

குவைத்தின் Rumaithiya பகுதியில் இன்று(03/03/21) மாலையில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இந்தியர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்ததாக உள்துறை அமைச்சகத்தின் அவசரகால உதவி பிரிவுக்கு அழைப்பு மூலம் தகவல் கிடைத்தது. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் Plot.No-9 யில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து Hawally Governorate காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த குடியிருப்புக்கு சென்ற அதிகாரிகள் குறிபிட்ட குடியிருப்பின் ஒரு அறையில் பலமுறை கொடூரமாக குத்தப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர். மேலும் இந்த கொலையினை செய்த நபர் உடலின் அருகில் அமர்ந்து இருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் நான்தான் கொலை செய்தேன் என்று அதிகாரிகளிடம் சரணடைந்தார் எனவும், இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்ததாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் உண்ணும் உணவு பொருட்கள்,எரிவாயு சிலிண்டர் வாங்குவது உள்ளிட்டவை Sharing அடிப்படையில் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் விளக்கினர். இதையடுத்து இறந்த நபரின் உடல் உடற்கூறு ஆய்வு உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும்,இறந்த இந்தியரின் உடலில் 9 குத்துக் காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடைய உயிரிழந்தவர் இந்திய பெண்மணி என்ற மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

Add your comments to குவைத்தின் Rumaithiya பகுதியில் இன்று இந்தியர் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்

« PREV
NEXT »