அமீரகத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி;சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : Abudhabi Police
அமீரகத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி;சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்
அபுதாபில் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற நிறுவனத்தின் அதிகாரிகளை அபுதாபி போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான தகவலை காவல்துறை அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்துள்ளது. போலிஸ் அதிகாரி ஒருவர் ஒரு வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக தவறான தகவல்களை உயர் அதிகாரிக்கு சமர்ப்பிக்க லஞ்சம் கொடுக்க முயன்றனர். ஆனால் இதை ஏற்க மறுத்த அதிகாரிகள் லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையின் போது அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். அபுதாபி போலீஸின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் லெப்டினல் கேணல் மாதர் மடாத் அல் முஹைரி இதை தெரிவித்துள்ளார்.மேலும் காவல்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் ஃபரிஸ் கலஃப் அல் மஸ்ரூய், அபுதாபி காவல்துறையின் நேர்மையையும், சட்டத்தை மீறுபவர்களை நேர்மையான சட்டத்தின் முன்பு கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகளையும் பாராட்டினார். ஊழல் குறித்த தகவல்களை பொதுமக்கள் 8002626 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் அல்லது 2828 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.