பஹ்ரைன் வழியாக சவுதியில் நுழையும் இந்தியர்களுக்கான வழியும் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது;On Arrival விசா பெற சவுதி விசா தகுதியானதா என்பதை உறுதி செய்த பின்னர் மட்டும் பயணம் செய்வது நல்லது
Image :Bahrain Airport
பஹ்ரைன் வழியாக சவுதியில் நுழையும் இந்தியர்களுக்கான வழியும் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
On Arrival விசாக்களை வழங்குவதற்கான நிபந்தனைகளை பஹ்ரைன் கட்டுபாடுகள் விதித்துள்ள நிலையில் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு சவுதியில் நுழைவதற்கான தற்காலிக புகலிடமாக பஹ்ரைனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் சவுதி விசாக்கள் உள்ள வெளிநாட்டவர்கள் பஹ்ரைன் வழியாக சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடுகளில் பஹ்ரைனுக்கு வந்த இந்தியர்கள் பலரும் விசா கிடைக்காத நிலையில் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டியிருந்தது.
இந்தியாவில் இருந்து சவுதிக்கு நேரடி விமானங்கள் இல்லாததால், பயண தடை காரணமாக துபாய் வழியாக சவுதி செல்ல பயணிப்பவர்கள் அமீரகத்தில் சிக்கித் தவித்தனர். அவர்களில் பலர் பின்னர் ஓமான் மற்றும் பஹ்ரைன் வழியாக சவுதி சென்றனர். ஓமானில் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பயணச் செலவும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில்தான் பலர் பஹ்ரைன் வழியாகப் பயணிக்கும் வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். பஹ்ரைனில் 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், கோவிட் எதிர்மறை சான்றிதழ் பெற்று (சவுதி-பஹ்ரைன்) காஸ்வே சாலை வழியாக சவுதி அரேபியாவுக்கு நுழைந்து வந்தனர். இப்படி நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சவுதிக்கு வந்து மீண்டும் வேலையில் சேர்ந்தனர். ஆனால் (19/3/2021)கடந்த நாள் முதல், பஹ்ரைன் அதிகாரிகள் On Arrival விசாக்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளனர்.
முன்னர் விதிமுறைகளின்படி குவைத், ஓமான் மற்றும் சவுதி விசாக்கள் வைத்திருப்பவர்கள் பஹ்ரைனில் வந்த பின்னர் On Arrival விசாக்களைப் பெறலாம். ஆனால் இது இப்போது உயர் பதவிகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பஹ்ரைனுக்கு வந்த பலரை அதிகாரிகள் நேற்று திருப்பி அனுப்பினர். இதன் மூலம் பல வெளிநாட்டவர்களுக்கு பஹ்ரைன் வழி சவுதியை அடைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பஹ்ரைன் வழியாக On Arrival விசா மூலம் சவுதியில் நுழைய முயற்சி செய்யும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் உங்களின் சவுதி வேலை விசா பஹ்ரைன் நாட்டின் On Arrival விசா கிடைக்க தகுதியான விசாவா என்பதை உறுதி செய்த பின்னர் மட்டும் பயணம் செய்வது நல்லது.