குவைத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது; ஆயிரக்கணக்கான கோழிகள் Wafra உள்ளிட்ட பகுதியில் கொன்று புதைக்கப்பட்டது
குவைத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது
குவைத் நாட்டில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் விவகாரங்கள் மற்றும் மீன்வள பொது அதிகாரசபையின் செய்தித் தொடர்பாளர் தலால் அல் தேஹானி தெரிவித்தார். நோய் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் கால்நடை மருத்துவ குழு பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்த நோய் மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை குவைத்தின் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறையால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலால் அல் தெஹானி அவர்கள் ஒரு செய்திக்குறிப்பு அறிக்கையில் மூலம் தெரிவித்துள்ளார். இதற்கிடைய நோய்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான கோழிகள் Wafra உள்ளிட்ட பகுதியில் கொன்று புதைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.