BREAKING NEWS
latest

Thursday, March 18, 2021

நெருக்கடி காலங்களில் குவைத்திற்கு ஆதரவாக நின்ற நாடு இந்தியா என்று குவைத் வெளியுறவு அமைச்சர் கூறினார்

நெருக்கடி காலங்களில் குவைத்திற்கு ஆதரவாக நின்ற நாடு இந்தியா என்று குவைத் வெளியுறவு அமைச்சர் அஹ்மத் நாசர் அல் முகமது அல் சபா அவர்கள் கூறியுள்ளார்

நெருக்கடி காலங்களில் குவைத்திற்கு ஆதரவாக நின்ற நாடு இந்தியா என்று குவைத் வெளியுறவு அமைச்சர் கூறினார்

குவைத்தின் வெளியுறவு அமைச்சர் டாக்டர்:அஹ்மத் நாசர் அல் முகமது அல் சபா அவர்கள் நாட்டின் இருண்ட காலங்களிலும், நெருக்கடி நிறைந்த நேரத்திலும் இந்தியா உடன் நின்றதை நன்றியுடன் நினைவு கொள்கிறோம் என்று இரண்டு நாட்கள் பயணமாக நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு டெல்லி சென்றடைந்த அல் சபா தெரிவித்தார். இதையடுத்து அரசுமுறை பயணமாக சென்ற அவர் இன்று(18/03/21) காலை 11 மணிக்கு குவைத் திரும்பினார். முன்னதாக தன்னுடைய வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளை மேலும் பலப்படுத்தியுள்ளது எனவும், இரு நாடுகளும் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைநாட்ட தங்கள் உறுதியான நிலைபாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், இணை அமைச்சர் முரளிதரன் உடன் குவைத் வெளியுறவு அமைச்சர் அஹ்மத் நாசர் அல் முகமது அல் சபா சந்திப்பு நடத்தினார். அப்போது உடன் குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அலி அல் சயீத், இந்தியாவிற்கான குவைத் தூதர் ஜசிம் அல் நஜீம், குவைத் சுகாதரத்துறை அமைச்சக துணை செயலாளர் டாக்டர்.அப்துல்லா அல் குவைனி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு துறையின் துணை செயலாளர் அகமது அல்-சுரைம் ஆகியோர் கலந்து கொண்டார்.

உணவு, பாதுகாப்பு, மின்சாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் மேலும் ஒத்துழைப்பு மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் விவாதித்தனர்.நெருக்கடியின் போது இந்தியாஅளித்த ஆதரவை நினைவு கூர்ந்த குவைத் வெளியுறவு மந்திரி ஷேக் அஹ்மத் அல் சபா, கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்திய செவிலியர்கள் குவைத் மக்களுடன் கை கோர்த்தது என்றார். கோவிட்டைத் தடுக்க இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவும் பகலும் உழைத்தனர் என்றார். இந்தியாவில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதும் கூட மருத்துவ உதவி வழங்க இந்திய அரசு தயாராக இருந்தது எனவும் இது பாராட்டத்தக்கது என்றும் அவர் மேலும் கூறினார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வதிலும் குவைத் இந்தியாவின் உதவியையும் ஒத்துழைப்பையும் கோரியது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே இங்கு அமைதி முயற்சிகள் மேற்கொள்ள முடியும் என்று குவைத் வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார். இப்போது சமாதான முயற்சிகள் கைவிடப்பட்டால், இப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமை மேலும் மோசமடையும் என்றார்.

மேலும் தற்போதைய சூழ்நிலை சமாதான முயற்சிகள் மேற்கொள்ள சிறந்த நேரம் என்றும் கூறினார். பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்சினைகள் பல ஆண்டுகள் பழமையானவை எனவும், இந்த பிராந்தியத்தில் ஏராளமான இரத்தக்களரி, வன்முறை மற்றும் சோகமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்போது பாலஸ்தீனியர்களிடையே விரக்தி மட்டுமே உள்ளது," என்றும் சபா கூறினார். குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் அல் ஹமாத் அல் சபா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தை அஹ்மத் நாசர் அல் முகமது அல் சபா அவர்கள் அமைச்சர் ஜெயசங்கர் அவர்களிடம் ஒப்படைத்தார்.

Add your comments to நெருக்கடி காலங்களில் குவைத்திற்கு ஆதரவாக நின்ற நாடு இந்தியா என்று குவைத் வெளியுறவு அமைச்சர் கூறினார்

« PREV
NEXT »