மஸ்கட் மாகாணத்தில் முழுமையான ஊரடங்கு விதிக்கப்படுகிறது என்ற செய்தி போலியானது ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Image : Oman night lockdown
மஸ்கட் மாகாணத்தில் முழுமையான ஊரடங்கு விதிக்கப்படுகிறது என்ற செய்தி போலியான செய்தியாகும்
ஓமானின் மஸ்கட் மாகாணத்தில் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முழுமையான ஊரடங்கு விதிக்கப்படுகிறது என்ற செய்தி முற்றிலுமாக தவறான தகவல் என்று அரசு தொடர்பு செய்தி மையம் அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கடந்த ஆண்டு கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் உச்சக் குழு அறிவித்த ஊரடங்கு தொடர்பான பழைய ட்விட்டர் செய்தியை புதிய செய்தி என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடைய ஓமானில் கடந்த மார்ச்-28 ஞாயிற்றுக்கிழமை முதல் பகுதிநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தினமும் இரவு 8:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை பகுதிநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முதல்கட்டமாக வருகின்ற ஏப்ரல்-08 வரையில் உத்தரவு நடைமுறையில் இருக்கும்.