குவைத் பெற்றோர்கள் கவனத்திற்கு;நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு இடையே கொரோனா பாதிப்பு அளவு தினசரி உயர்ந்த வண்ணம் உள்ளது
குவைத் பெற்றோர்கள் கவனத்திற்கு; குழந்தைகளுக்கு இடையே கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது
குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த மாதத்திலிருந்து இரு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குவைத்தின் ஜாபர் மருத்துவமனையில் மட்டும் பரிசோதனைக்காக வருகின்ற நபர்களில் ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் எட்டு குழந்தைகளுக்கு கோவிட் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் வருவதற்கு முன்னர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று குழந்தைகள் மட்டுமே கோவிட் பாசிட்டிவாக கண்டதாக ஜாபர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் டாக்டர். டானா அல் ஹக்கான் கூறினார். ஆனால் இந்த மாதம் இந்த எண்ணிக்கை ஐந்து முதல் எட்டு வரை என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது என்று உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் ஆய்வகங்கள் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஊரடங்கு உத்தரவின் போது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கான இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் தடுப்பூசி மையங்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை திறக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 462,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதம் பேர் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்