கத்தாரில் கோவிட்டின் இரண்டாவது அலை;முழுமையான ஊரடங்கு தேவைப்படும் என்று அதிகாரிகள் தொலைக்காட்சியில் பேசுகையில் இன்று கூறியுள்ளார்
Image : டாக்டர்.அகமது முகமது அல் ரயான்
கத்தாரில் கோவிட்டின் இரண்டாவது அலை;முழுமையான ஊரடங்கு தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்
கத்தாரில் கோவிட்டின் இரண்டாவது அலை அதிகமான மக்களுக்கு பரவாமல் தடுக்க முழுமையான ஊரடங்கு தேவைப்படும் என்று ஹமத் மருத்துவக் கழகத்தின் தீவிர சிகிச்சை பிரிவின் செயல் தலைவர் டாக்டர்.அகமது முகமது அல் ரயான் தெரிவித்தார் இரண்டாவது அலையின் தீவிரத்தை பொறுத்து, இரண்டு முதல் மூன்று வாரங்கள் முழுமையான ஊரடங்கு தேவைப்படலாம் என்று தொலைக்காட்சியில் பேசுகையில் இன்று அகமது முகமது அல் ரயான் இதனை கூறினார். இது நாடு முழுவதும் அதிகரித்து வருகின்ற கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு முழுமையான ஊரடங்கு வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த அணுகுமுறையாகும் என்றார்.மக்கள் வழக்கம் போல் வேலை, நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் சமூகக் கூட்டங்களுடன் சென்றால் கோவிட் வேகமாக பரவுவார் என்று அவர் கூறினார். கடநத மே-2020 யில், கோவிட்டின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது,220 நோயாளிகள் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். வைரஸின் இந்த இரண்டாவது அலை மூலம் அதிகமான மக்கள் நோய்வாய்ப்பட்டு வருகிறார்கள், மேலும் தீவிரமாக அறிகுறிகளுடன் அவர்கள் காணப்படுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.
மேலும் அவர் கூறுகையில் கோவிட்டின் மரபணு மாற்ற ஏற்பட்ட பல்வேறு வகையான வைரஸ் பாதிப்புகள் ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு கட்டுபாடுகள் இருந்தாலும்கூட ஹமத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த transit பயணிகளிடம் இருந்து பிஸியான நேரங்கள் நெருங்கிய தொடர்புகள் மூலம் நாட்டிற்குள் இந்த வகையான வைரஸ் நுழைந்திருக்கலாம் என்றார். எந்த வகையான வைரஸ் பாதிப்புகளுக்கும் சிகிச்சை முறைகள் ஒரே மாதிரியானவை என்று அவர் விளக்கினார். இருப்பினும், கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்கள் மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.அதே நேரத்தில், இரண்டாவது அலைகளால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.