BREAKING NEWS
latest

Monday, March 15, 2021

சவுதியில் புதைக்கப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் அனுப்பக்கோரிய மனு;டெல்லி நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது

சவுதியில் புதைக்கப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் அனுப்பக்கோரிய மனு;டெல்லி நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது என்று தினசரி செய்தி வெளியிட்டுள்ளது

சவுதியில் புதைக்கப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் அனுப்பக்கோரிய மனு;டெல்லி நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது

சவுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தனது கணவரின் உடலை மீட்க இந்திய பெண் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.இந்திய தூதரக மொழிபெயர்ப்பாளரின் தவறே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், இறந்த நபரின் மனைவி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் சவுதி அரேபியாவில் கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார் எனவும்,இந்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி இறந்தார் என்று மனுதாரர் கூறினார்.

மேலும் அந்த மனுவில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மூலம் கணவர் உயிழந்தார் எனவும் அவரது உடல் சவுதியின் ஜிசான் மாகாணத்திலுள்ள பிஷ் பொது மருத்துவமனையில் சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை பாதுகாக்கப்பட்டன எனவும்,மேலும் அவரது கணவரின் உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் பிப்ரவரி-18 அன்று, அவரது கணவரின் உடல் சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பதாக குடும்பத்தினருக்கு இந்திய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி மூலம் தெரியவந்ததன் மூலம் அதிர்ச்சியடைந்தாக தெரிவித்துள்ளனர். இது ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் செய்த தவறு என்றும்,எனவே உயிரிழந்த சஞ்சீவ் குமாரின் உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று மனைவியும், குடும்பத்தினரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த செய்தியை சவுதி தினசரி செய்தியாக ஒன்று இன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

Add your comments to சவுதியில் புதைக்கப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் அனுப்பக்கோரிய மனு;டெல்லி நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது

« PREV
NEXT »