குவைத்துக்கு பல மாதங்களுக்குப் பிறகு,இந்திய வீட்டுத் தொழிலாளர்கள் வருகிறார்கள்;ஆட்சேர்ப்பு முகவர் கூட்டமைப்பின் தலைவர் காலித் அல் தக்னான் தெரிவித்தார்.
குவைத்துக்கு பல மாதங்களுக்குப் பிறகு,இந்திய வீட்டுத் தொழிலாளர்கள் வருகிறார்கள்
குவைத்திற்கு கடந்த பல மாதங்களாக வீட்டுத் தொழிலாளர்கள் வருவதில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வந்த நிலையில் இந்தியாவி்ல் இருந்து வீட்டுத் தொழிலாளர்கள் குவைத் திரும்புகின்றனர் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட(Required) வீட்டுத் தொழிலாளர்களின் முதல் Batch அடுத்த வாரம் குவைத்துக்கு வருவார்கள் என்று வீட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முகவர் கூட்டமைப்பின் தலைவர் காலித் அல் தக்னான் தெரிவித்தார்.
வீட்டுத் தொழிலாளர்களுக்கு புதிய விசாக்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதாலும், விடுமுறையாக தாயகம் சென்ற வீட்டுத் தொழிலாளர்கள் திரும்பாததாலும் நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்தது. இதன் மூலம் புதிதாக தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்தியாவில் இருந்து கடந்த பல மாதங்களுக்கு முன்பே நாட்டில் நுழைய தேவையான நடைமுறைகளை முடித்துவிட்டு காத்திருந்த தொழிலாளர்களை பல மாத கால இடைவெளிக்கு பிறகு குவைத் வருகிறார்கள்.