துபாயில் காணாமல் போன 4 வயது சிறுவனை போலீசார் 40 நிமிடங்களுக்குள் மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது
Image credit: Dubai Police
துபாயில் காணாமல் போன 4 வயது சிறுவனை போலீசார் 40 நிமிடங்களுக்குள் மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்தனர்
துபாயில் காணாமல் போன நான்கு வயது சிறுவனைக் கண்டுபிடித்து 40 நிமிடங்களுக்குள் பெற்றோரிடம் துபாய் போலீசார் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்த நிலையில் இன்று இது தொடர்பான செய்தியை துபாய் செய்திதாள்கள் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. உம் சுகைம் பகுதியில் வைத்து தங்களுடைய மகன் காணாமல் போனான் என்று பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் என்று துபாய் காவல்துறையின், சுற்றுலா பொலிஸ் பிரிவின் இயக்குநர் கர்னல். முபாரக் அல் கிட்பி தெரிவித்தார்.
பெற்றோர் உணவு வாங்கிக் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடிரென காணாமல் போயுள்ளார். குழந்தை காணாமல்போன இடம் கடற்கரையின் அருகாமையில் என்பதால் பயந்து போன பெற்றோர் அங்குள்ள பாதுகாவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் துபாய் போலீஸை தொடர்பு கொண்டனர். தகவல் கிடைத்ததும், துபாய் காவல்துறை அனைத்து ரோந்து குழுக்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல்களை அனுப்பியது.
இதையடுத்து 40 நிமிட தேடலுக்குப் பிறகு, சிறுவன் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது குழந்தை பயத்தில் அழுது கொண்டிருந்தார், மேலும்பசி மற்றும் தாகத்தால் சோர்வாக இருந்தான்,போலீஸ் குழு உடனடியாக குழந்தையினை பெற்றோரிடம் அழைத்துச் சென்றது. காவல்துறையினர் உடனடியாக தலையிட்டதற்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களை பொது இடங்களில் வைத்து கவனிக்காமல் விடக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.