BREAKING NEWS
latest

Tuesday, March 9, 2021

அபுதாபியில் நுழைய பின்வரும் நாடுகளைச் சேர்ந்த நபர்கள் முன்கூட்டியே பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை

அபுதாபியில் நுழைய பின்வரும் நாடுகளைச் சேர்ந்த நபர்கள் முன்கூட்டியே பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்ற தகவலை அதாகாரிகள் வெளியிட்டுள்ளனர்

Image credit: Abudhabi Airport

அபுதாபியில் நுழைய பின்வரும் நாடுகளைச் சேர்ந்த நபர்கள் முன்கூட்டியே பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை

அபுதாபி நுழைய முன்கூட்டியே பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லாத 13 நாடுகள் பட்டியலை கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. இதில் புதிதாக சவுதி அரேபியா, கஜகஸ்தான் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்துள்ளது.முன்னதாக ஆஸ்திரேலியா, பூட்டான், புருனே, சீனா, கிரீன்லாந்து, ஹாங்காங், ஐஸ்லாந்து, மொரீஷியஸ், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகியவை நாட்டிற்க்கு இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில் புதிதாக இந்த 3 நாடுகளின் பெயர்கள் கூடுதலாக புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா,இலங்கை உள்ளிட்ட நாடுகள் இடம்பெறவில்லை.

ஒவ்வொரு நாட்டின் கோவிட் நிலைமை மதிப்பிடப்பட்ட பின்னர் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை பட்டியல் மாற்றி அமைக்கப்படும். மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முன்கூட்டியே பி.சி.ஆர் சோதனை செய்து சான்றிதழ் எடுக்க தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியது அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய பிறகு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. பி.சி.ஆர் சோதனை முடிவு வெளியாகின்ற வரையில் இந்த நாட்டினர் தங்களை தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால் தனிமைப்படுத்தல் தேவையில்லை. Positive-ஆக இருந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும்.

Add your comments to அபுதாபியில் நுழைய பின்வரும் நாடுகளைச் சேர்ந்த நபர்கள் முன்கூட்டியே பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை

« PREV
NEXT »