குவைத் வருகின்ற நபர்களில்,தாயகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு,நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : Kuwait Moh Staff
குவைத் வருகின்ற நபர்களில்,தாயகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு,நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு
கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மூன்று பிரிவினருக்கு குவைத்தில் தற்போது நடைமுறையில் உள்ள நிறுவன தனிமைப்படுத்தலில்(Institutional Isolation) இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற குவைத் அமைச்சரவையின் முடிவு, குவைத்துக்கு வெளியே வேறு நாட்டிலிருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தொடர்பாக தெளிவில்லாமல் இருந்த நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் குவைத்துக்கு வெளியே வேறு நாட்டிலிருந்து எடுத்துக்கொண்ட தடுப்பூசி குவைத் சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்க வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
குவைத்தில் வசிக்கின்ற மக்களுக்கு தற்போது ஃபைசர் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. குவைத் திரும்பும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மொசாஃபிர் பயன்பாட்டு செயலியில் தற்போது தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்கான Option வழங்கப்பட்டுள்ளன. இதன் வழியாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட விபரங்கள் தெளிவாக வழங்குகின்ற நபர்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று உள்ளூர் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இவர்கள் புறப்பட்ட நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்,அத்துடன் ஒரு வாரகால வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், தொடர்ந்து ஒரு வாரம் முடிந்ததும், நீங்கள் மீண்டும் குவைத்தில் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கோவிட் எதிர்மறை சான்றிதழை பெற வேண்டும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.