குவைத்தில் வெளிநாட்டினரை குறிவைத்து அதிகாரியாக நடித்து திருட்டில் ஈடுபட்ட குவைத் குடிமகனை காவல்துறையினர் கைது செய்தனர் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image : பறிமுதல் செய்யப்பட்டநாய்
குவைத்தில் வெளிநாட்டினரை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட குவைத் குடிமகனை அதிகாரிகள் கைது செய்தனர்
குவைத்தில் வெளிநாட்டினரை குறிவைத்து கொள்ளையடித்த ஒரு குவைத் குடிமகனை அஹ்மதி பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக இன்று(13/02/21) மாலையில் வெளியாகியுள்ள செய்தியில் கைது செய்யப்பட்ட நபர் காவல்துறை உடையினை அணிந்து மற்றும் ஒரு போலீஸ் நாயையும் உடன் வைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவர் தனது நாயின் உதவியுடன் போதைப் பொருட்களை கண்டறிவது போல் தன்னை ஒரு துப்பறியும் அதிகாரியாக காட்டி கொண்டார்.
இந்நிலையில் சந்தேகமடைந்த சிலர் அவசரகால கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து மோசடி நடந்தாக கூறப்பட்ட பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது பாதுகாப்பு அதிகாரியை போல ஆள்மாறாட்டம் செய்த நபர், திருடப்பட்ட பொருட்கள், ஒரு நாய் மற்றும் காவல்துறை சீருடையுடன் கைது செய்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மேல் நடவடிக்கைக்காக கிரிமினல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.