சவுதியிலிருந்து Final-Exit மூலம் ஒப்பந்த காலம் முடிவதற்குள் நீங்கள் வெளியேறினால் மீண்டும் நாட்டில் நுழைய முடியாது
சவுதியிலிருந்து Final-Exit மூலம் ஒப்பந்த காலம் முடிவதற்குள் நீங்கள் வெளியேறினால் மீண்டும் நாட்டில் நுழைய முடியாது
சவுதியில் வேலை செய்து வருகின்ற எந்தவொரு நபரும் தனது வேலைவாய்ப்பு ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு Final-Exit மூலம் நாட்டை விட்டு வெளியேறியால் தொழிலாளி தொழில் விசாவில் நாட்டிற்குள்(சவுதியில்) மீண்டும் நுழைய அனுமதிக்கப்படமாட்டார். முதலாளிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளிக்கும் இடையிலான ஒப்பந்த உறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஸ்பான்சர்ஷிப் தொடர்பான புதிய சீர்திருத்த சட்டம் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைமுறையில் வந்துள்ள நிலையில் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் Final-Exit விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு விசா செல்லுபடியாகும். அதற்குள் சம்பந்தப்பட்ட நபர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அதுபோல் Final-Exit விசாவிற்கு தொழிலாளி விண்ணப்பித்தால், நடைமுறை முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் முதலாளிக்கு(Sponsore) ஒரு அறிவிப்பு அனுப்பப்படும். மேலும் Final-Exit விசா காலாவதியான பிறகு நாட்டை விட்டு வெளியேறத் தவறியது சட்டவிரோதமாக கருதப்படும். அதே நேரத்தில் தொழிலாளி தானாகவே தன்னைச் சார்ந்தவர்களின்(குடும்பத்தினர்) Final-Exit விசா விண்ணப்பத்தை ரத்து செய்யலாம் என்றும் தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.