அபுதாபி விமான நிலையத்தில் இனிமுதல் 90 நிமிடங்களில் இலவசமாக பி.சி.ஆர் முடிவுகள்; புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு
அபுதாபி விமான நிலையத்தில் இனிமுதல் 90 நிமிடங்களில் இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனை; புதிய வசதி அறிமுகம்
அபுதாபி விமான நிலையங்களுக்கு இப்போது, வரும் அனைத்து பயணிகளுக்கும் இலவச பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை எளிதாக பெறலாம், மேலும் இந்த கோவிட் -19 பரிசோதனைக்காக முடிவுகள் வெறும் 90 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட பயணிக்கு விமான நிலைய சுகாதரத்துறை வழங்குகிறது. இதுதொடர்பாக இன்று(09/03/21) செவ்வாய்க்கிழமை அபுதாபி விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விமான நிலையத்தில் உள்ள இந்த புதிய வேகமான ஆர்டி-பி.சி.ஆர் சோதனை ஆய்வகம் வளைகுடா நாடுகளில் இதுதான் முதல் முறையாகும்.
அபுதாபி விமான நிலையத்தின் 1 மற்றும் 3 ஆகிய டெர்மினல்கள் வழியாக அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் AUH PCR பரிசோதனை விமான நிலையத்தில் செய்யப்படும். முடிவுகள் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் சம்பந்தப்பட்ட பயணிக்கு பகிரப்படும், மேலும் அல்ஹோஸ்ன் மொபைல் பயன்பாட்டு செயலி வழியாகவும் முடிவுகள் பயணிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அபுதாபிக்கு வருகின்ற பயணிகள் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் -19 எதிர்மறை பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் எடுத்து வர வேண்டும் தற்போதைய விதிமுறையில் மாற்றம் இல்லை. அதாவது தாயகத்தில் இருந்து பி.சி.ஆர் சோதனையின் எதிர்மறை முடிவுகளை உறுதி செய்கின்ற பி.சி.ஆர் சான்றிதழை கையோடு எடுத்துவர வேண்டும். இத்துடன் விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து பயணிகளுக்கும் கூடுதலாக 90 நிமிடங்களில் முடிவு வெளியாகின்றன இந்த புதிய பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்படும்.