ஓமானின் முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் கபூஸ் அவர்களுக்கு காந்தியின் அமைதி விருது அறிவிக்கப்பட்டது;பரிசுத் தொகையாக ரூ.1 கோடி மற்றும் விருதும் வழங்கபடும்
Image : மறைந்த சுல்தான் கபூஸ்
ஓமானின் முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் கபூஸ் அவர்களுக்கு காந்தியின் அமைதி விருது அறிவிக்கப்பட்டது
ஓமானின் முன்னாள் ஆட்சியாளரான மறைந்த சுல்தான் கபூஸுக்கு "காந்தியன் அமைதி விருது" சர்வதேச அங்கீகாரமாக இந்திய அரசு இதை வழங்குகிறது. 2019-ஆம் ஆண்டிற்கான விருது வென்றவர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு தேர்வு செய்தது. பரிசுத் தொகையாக ரூ.1 கோடி மற்றும் விருதும் வழங்கபடும். மறைந்த சுல்தான் கபூஸ் ஒரு தத்துவத் தலைவர் என்றும், சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவரது நிதானமான முடிவுகள் உலகளாவிய பாராட்டையும், மரியாதையையும் பெற்றுள்ளதாகவும் கலாச்சார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சகத்தின் அறிக்கையில் பல்வேறு நாட்களுக்கு இடையிலான மோதல்களும், அதை தொடர்ந்து அமைதிக்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அவர் அளித்த பங்குகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. "காந்தியன் அமைதி விருது" முதன்முதலில் 1995-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்து.