குவைத் அமைச்சரவையின் இன்றைய கூட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது;அதன் விரிவான விபரங்கள் பின்வருமாறு
Image : தாரிக் அல் முசாரம்
குவைத் அமைச்சரவை கூட்டத்தின் ஊரடங்கு உள்ளிட்ட முக்கியமான முடிவுகள் விரிவாக இங்கே அறியலாம்
குவைத் அமைச்சரவையின் இன்றைய முடிவுகள் தொடர்பான தகவலை அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முசாரம் வெளியிட்டுள்ளார் அதன் விபரங்கள் பின்வருமாறு:
- குவைத் மக்கள் அல்லாத வெளிநாட்டினர் நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவித்தார். இதன் மூலம் குவைத்தில் நுழையலாம் என்று துபாய் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கியிருக்கிற இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான கடைசி வாய்ப்பும் அடைந்துள்ளது.
- கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நாட்டில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மார்ச்-7 முதல் ஒரு மாத காலத்திற்கு பகுதிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை 5 முதல் அதிகாலை 5 வரையில் (12 மணி நேரம்)இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.
- உணவகங்களில் இந்த நேரத்தில் நுழைய அனுமதி இல்லை,வீட்டு டெலிவரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- டாக்ஸியில் 2 பேர் பயணிக்க மட்டுமே அனுமதி.
- பார்க்(Parks) மற்றும் பூங்காக்கள்(Gardens) மூடப்பட்டு இருக்கும்
- உணவகங்கள், Cooperative Shop மற்றும் Pharmacies ஆகியவற்றிக்கு ஊரடங்கு நேரத்தில் டெலிவரிக்கு அனுமதி வழங்கபடும்
- ஏசி, லிப்ட், எக்சிலேட்டர் போன்றவற்றை பழுதுபார்க்கும் நபர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
- மசூதியில் இந்த நேரத்தில் தொழுகைக்காக கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற நபர்கள் தங்களின் அருகில் உள்ள மசூதிகளுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு நடந்து செல்லலாம் வாகனங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.
- வெளிநாட்டவர் நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.
- அதே நேரத்தில் கடந்த ஒரு மாதகாலமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையம் ,சாலுன்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பிற நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மார்ச்-7 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் காலை 5 முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.