குவைத்தில் பிறந்து வளர்ந்த இந்தியாவை சேர்ந்த பெண் மிஸ் யுனிவர்ஸ் இன்டர்நேஷனல் போட்டில் பங்கேற்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது
Image credit: அட்லைன் காஸ்டெலினோ
குவைத்தில் பிறந்து வளர்ந்த இந்திய பெண் மிஸ் யுனிவர்ஸ் இன்டர்நேஷனல் போட்டில் பங்கேற்க உள்ளார்
குவைத்தில் பிறந்து வளர்ந்து கடந்த ஆண்டு மும்பையில் நடந்த மிஸ் திவா யுனிவர்ஸ் 2020 ஐ வென்ற அட்லைன் காஸ்டெலினோ, வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளார்.மிஸ் யுனிவர்ஸ் இன்டர்நேஷனல் அழகிப்போட்டி வருகின்ற மே 2021 மாதம் அமெரிக்காவில் இல் நடைபெறும். கர்நாடகா மாநிலம் உடுப்பியை சேர்ந்த இவருடைய பெற்றோர் பெயர் அல்போன் மற்றும் மீரா என்பதாகும்.
அட்லைன் காஸ்டெலினோ குவைத்தில் பிறந்தவர்.குவைத்தில் இந்தியன் சென்ட்ரல் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை பயின்று வந்த நிலையில் 15-வது வயதில் இந்தியாவுக்கு திரும்பி மும்பையில் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். தொடர்ந்து அங்குள்ள வில்சன் கல்லூரில் வணிகத்துறை பட்டம் பெற்றார். மாடலிங் செய்து வந்தாலும்,VSP என்ற அமைப்புடன் இணைந்து விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், சமத்துவமின்மை நீக்கி தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட செய்வது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகின்றார்.