அமீரகத்தில் 4 மாத கர்ப்பமாக இருந்த இந்திய ஆசிரியை கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த ஜசினா(வயது-34)
அமீரகத்தில் 4 மாத கர்ப்பமாக இருந்த இந்திய ஆசிரியை கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உம்-அல்-குவைன் நியூ இந்தியப் பள்ளியின் அறிவியல் ஆசிரியரும் மற்றும் அந்த பள்ளியின் அறிவியல் துறையின் தலைமை பொறுப்பாளர் ஆகவும் பதவிவகித்த ஜசினா(வயது-34) என்ற கேரளா மாநிலம் மலப்புரம், வலாஞ்சேரியை சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜசினா அவர்களுக்கு திடிரென மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜசினாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்டது, ஆனால் நேற்று(09/03/21) செவ்வாய்க்கிழமை காலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். மேலும் ஜசினா நான்கரை மாத கர்ப்பமாக இருந்தார் என்ற துயரமான செய்தியும் வெளியாகியுள்ளது.
ஜசீனா தலைமையிலான இந்திய பள்ளி மாணவர்கள் அணி கடந்த 2019 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் இறுதிப் போட்டியை எட்டியது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவர் பெயர் சாலிஹ், முஹம்மது ஷாஹ்தான் மற்றும் இஷான் அகமது என்ற இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், ஜசினா மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கொரோனா நோய்தொற்று நெறிமுறைகளுக்கு உட்பட்டு உடல் நல்லடக்கம் உம்-அல்-குவைனில் நடந்தது.