குவைத்தில் வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட இந்தியர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : முஹம்மது மற்றும் விபத்தில் சிக்கிய கார்
குவைத்தில் வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட இந்தியர் உயிரிழந்தார்
குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இந்தியா,கேரளா மாநிலம் திருச்சூர் வடக்கு திருச்சூர் வடக்கேகாடு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது(வயது-59). நேற்று(22/03/21) பிற்பகல் அல்-ராய் லுலு-மாலில் இருந்து அப்பாசியாவுக்கு காரில் சென்றுக்கொண்டு இருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 6-ஆம் நம்பர் சாலையில் பக்கவாட்டில் டிவைடரில் மோதி நின்ற நிலையில்,முதலில் இந்த சம்பவம் விபத்து என்று கருதப்பட்டது. இதையடுத்து இது குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறை அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் ஃபர்வானியா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.இருந்தாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை,தொடர்ந்து நடந்த பரிசோதனையில் மாரடைப்பே மரணத்திற்கு முக்கிய காரணம் என்பது கண்டறியப்பட்டது.
உயிரிழந்த முஹம்மது சமீப காலத்தில் இதய பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்தார். கடந்த பல ஆண்டுகளாக குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு ஹசீனா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் தாயகத்தில் உள்ளனர்,மேலும் யாத்திரா குவைத் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.