சவுதியில் வேலைக்காக ஒரு மாதத்திற்கு முன்பு வந்த இந்திய செவிலியர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த ராஜிமோள்(வயது-32)
சவுதியில் வேலைக்காக ஒரு மாதத்திற்கு முன்பு வந்த இந்திய செவிலியர் மாரடைப்பால் உயிரிழந்தார்
இந்தியாவில் இருந்து வேலைக்காக சவுதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்காக புதிய விசாவில் வந்த இந்திய செவிலியர் பெண்மணி மாரடைப்பால் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்மணி இந்தியா,கேரளா மாநிலம் பதானம்திட்டா பகுதியை சேர்ந்த ராஜிமோள்(வயது-32) என்பது தெரியவந்துள்ளது. ரியாதில் உள்ள Dallah மருத்துவமனையில் வேலை செய்து வந்த ராஜி மோள் என்ற பெண்மணி திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. ராஜியின் கணவர் பெயர் அகில் என்பதாகும். சட்ட நடவடிக்கை முடித்து உடலை தாயகம் அனுப்புவதற்கான வேலைகளை அங்குள்ள இந்திய அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.