குவைத்தில் இணைய வசதி மீண்டும் முழுமையாக சீரமைக்கப்பட்டது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது
குவைத்தில் இணைய வசதி மீண்டும் முழுமையாக சீரமைக்கப்பட்டது
குவைத்தில் இணைய வசதி மீண்டும் முழுமையாக சீரமைக்கப்பட்டது என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது சாலை சீரமைப்பு பயணிகளின் போது தற்செயலாக சர்வதேச இணைய சேவை கேபிள்கள் வெட்டப்பட்டன. பின்னர் இதன் காரணமாக இன்று(27/03/21) காலை முதல் இணைய சேவை நாட்டில் 60 சதவீதம் வரையில் துண்டிக்கப்பட்டது. உம் அல்-ஹேமான் மற்றும் நுவைசிப் எல்லைக்கும் இடையிலான சர்வதேச கேபிள் அமைப்பு தற்செயலாக வெட்டப்பட்டு நீக்கப்பட்டதே இதற்கு காரணம். வெட்டப்பட்ட கேபிள்களை சரிசெய்ய சர்வதேச இணைப்புத்துறையின் அவசர குழு கடுமையாக உழைத்ததன் பலனாக ஒரே இரவில் இணைப்பு மீட்டமைக்கப்பட்டது.
இந்த பிரச்சனை தொடர்பான சேதத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ராணா அல் பாரிஸ் தெரிவித்துள்ளார். இன்று(27/03/21 காலை முதல் நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பல்வேறுபட்ட துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் குவைத்தில் இணைய வசதி மீண்டும் முழுமையாக சீரமைக்கப்பட்டது என்ற செய்தி வெளியிட்டுள்ளன.