குவைத்தில் ஊரடங்கு நேரத்தில் 5 வகையான நபர்கள் அவசரகால அனுமதி பெற்று வெளியே செல்லலாம் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Image: KuwaitCity Road
குவைத்தில் ஊரடங்கு நேரத்தில் 5 வகையான நபர்கள் அவசரகால அனுமதி பெற்று வெளியே செல்லலாம்
குவைத்தில் ஊரடங்கு நேரத்தில் 5 பிரிவுகளில் உள்ளவர்கள் அவசரகால அனுமதி வெளியே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் அவசரகால நிலையில் அனுமதி பெற்று வெளியே செல்லலாம். நீங்கள் உள்துறை வெளியிட்டுள்ள தளத்தில் பதிவு செய்து சில நிமிடங்களில் அனுமதி கிடைக்கும். அதிகாரபூர்வ தளத்தின் Link: https://curfew.paci.gov.kw/request/create இதுவாகும்.
5 பிரிவினர் என்பது பின்வரும் நபர்கள் ஆவார்கள் அதன் விவரங்கள் பின்வருமாறு,திடிரென ஏற்படும முதலுதவி(First aid), உடல் பரிசோதனை(Medical checkup), குருதித்தானம்(Blood donation),கொரோனா பரிசோதனை மாதிரி வழங்குதல் அல்லது தடுப்பூசி எடுப்பதற்காக( Covid-19 swab or getting vaccinated against Covid-19) ஆகியவை இதில் அடங்கும். அதிகபட்சமாக 2 மணிநேரம் வழங்கபடும்.உங்கள் பெயர்,சிவில் ஐடி எண்,வாகன எண்,செல்லும் இடம்(Location) உள்ளிட்ட அடிப்படையான தகவல்களை கொடுத்து பதிவு செய்ய முடியும்.இந்த அனுமதியை தவறான வழியில் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.