BREAKING NEWS
latest

Tuesday, March 9, 2021

குவைத்தில் தொழில் விசாவில், வெளியே வேலை செய்யும் நபர்கள் ஊரடங்கு காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்

குவைத்தில் தொழில் விசாவில் வந்து வெளியே மற்ற வேலை செய்யும் நபர்கள் ஊரடங்கு காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் சோதனையில் பிடிபட்டால் தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்படும்

Image : Kuwait Curfew Time

குவைத்தில் தொழில் விசாவில், வெளியே வேலை செய்யும் நபர்கள் ஊரடங்கு காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்

குவைத்தில் ஒரு Sponsor-யின் கீழ் வேலைக்காக வந்து பிறகு, அவர்கள் வந்த வேலைக்கு பதிலாக மற்ற பல வேலைகளை செய்து வருமானம் ஈட்டுவது வாடிக்கையான ஒன்று,இது தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பான காரியமும் கூட, இவர்கள் இந்த ஊரடங்கு காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நபர்கள் பிடிபட்டால் அதிகாரிகள் நாடுகடத்தல் மையத்திற்கு பிடிபடுகின்ற தொழிலாளர்களை ஒப்படைப்பார்கள். இப்படி சட்டத்தை மீறுபவர்களைப் பிடிக்க மனிதவள ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் குவைத் நகராட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்து கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கியமாக ஊரடங்கு நேரத்தில் வீட்டு விநியோக நிறுவனங்களின் பணியாளர்களாக வேலை செய்கின்ற மற்றும் அதிலும் குறிப்பாக வாகனங்களை ஓட்டுகின்ற நபர்கள் உட்பட அனைவருமே ஒரே நிறுவனத்தின் ஊழியர்களாக இருக்க வேண்டும். இவர்களில் பலர் சட்டத்தை மீறி இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கண்டுபிடிக்க பட்டதின் அடிப்படையில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஊரடங்கு உத்தரவின் போது வெளி விசாவில் பணிபுரியும் நபர் விநியோக சேவையைச் செய்தால் அதிகாரிகளின் பரிசோதனை நடவடிக்கைகளில் பிடிக்கப்படும் என்பது உறுதி. ஊரடங்கு உத்தரவுக்கு இணங்க நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் நிறுவனத்தின் விவரங்களையும் சரிபார்க்கிறார்கள்.அவர்கள் பொருட்கள் விநியோகம் செய்ய உரிமம் பெற்றிருப்பதால் அது ஒரு பிரச்சனையல்ல,ஆனால் பொருட்களை Delivery செய்கின்ற நபர்களின் விசா அதே நிறுவனத்தில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add your comments to குவைத்தில் தொழில் விசாவில், வெளியே வேலை செய்யும் நபர்கள் ஊரடங்கு காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்

« PREV
NEXT »