குவைத்தில் கோதுமை மாவில் வைட்டமின்-டி சேர்க்க முடிவு செய்துள்ளதாக,குவைத் அரசின் மாவு ஆலை நிறுவனம் தெரிவித்துள்ளது;நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த முடிவு
குவைத்தில் கோதுமை மாவில் வைட்டமின்-டி சேர்க்க முடிவு செய்துள்ளதாக,குவைத் அரசின் மாவு ஆலை நிறுவனம் தெரிவித்துள்ளது
குவைத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிர்வாக அமைச்சகத்துடன் இணைந்து, அரசின் கீழ் இயங்கி வருகின்ற Flour(மாவு) மற்றும் பேக்கரி உற்பத்தி நிறுவனம் தாங்கள் உற்பத்தி செய்கின்றன கோதுமை மாவில் வைட்டமின்-டி சேர்க்கும் என்றுதெரிவித்துள்ளது. சர்வதேசதரத்தில் அடிப்படையில் சில அரபு மற்றும் சர்வதேச நாடுகளில் கோதுமை மாவு பயன்படுத்துவதைப் போன்றது, இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் சரியான அளவில் சேர்த்து மாவினை உறுதி செய்வதன் மூலம் உடலில் வைட்டமின்-டி அளவை பராமரிக்க இது ஒரு சிறந்த வழியாகும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முத்லக் அல் சயீத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவும் சூழலில் வைட்டமின்-டி சேர்க்கும் முடிவு மிகவும் முக்கியமானது என்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.