குவைத்தில் பள்ளிக்கூட தேர்வுகள் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கல்வித்துறையின் இணையத்தளத்தை மர்ம நபர் ஹேக் செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் பள்ளிக்கூட தேர்வுகள் நடத்தக்கூடாது என்ற கல்வித்துறையின் இணையத்தளத்தை மர்ம நபர் ஹேக் செய்தார்
குவைத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை ஒத்திவைப்பதாக அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் அடையாளம் தெரியாத நபர் குவைத் கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஹேக் செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குவைத் கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அடையாளம் தெரியாத ஒருவரால் ஹேக் செய்யப்பட்டது எனவும்,இந்த சம்பவம் இந்தவார தொடக்கத்தில் நடந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான காகிதத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியே இணையத்தளத்தை அந்த நபர் ஹேக் செய்தார் எனவும்,ஆனால் ஹேக்கிங் முயற்சியை பரிதாபகரமான மற்றும் இயலாமையின் செயல் என்று அதிகாரிகள் விவரித்தனர். இதையடுத்து வலைத்தளம் மீட்டெடுக்கப்பட்டது எனவும் காகிதத்துடன் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.