குவைத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பிறப்பு விகிதம் 2020-யில் பதிவாகியுள்ளது;இதேபோல் வெளிநாட்டினர் குழந்தைகளின் எண்ணிக்கை 4.69 சதவீதம் குறைந்து
குவைத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பிறப்பு விகிதம் 2020-யில் பதிவாகியுள்ளது
குவைத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிறந்துள்ள குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில்,மிகக் குறைந்த பிறப்பு விகிதம் 2020 ல் பதிவாகியுள்ளது. இது தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வ கணக்குகளை மேற்கொள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் குவைத்தில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 50,409 ஆகும், இது 2005-க்கு பிறகு உள்ள மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். கடந்த 2005-ஆம் ஆண்டில், குவைத்தில் 48,459 குழந்தைகளின் பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020-ல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2019-ல் இருந்து 2.9 சதவீதம் குறைந்துள்ளதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 2019-ல் இது 51,926 ஆக இருந்தது. நாடுகள் வாரியாக குவைத் குழந்தைகளின் எண்ணிக்கை 2019-ல் 31,870 லிருந்து 2020-ல் 31,295 ஆகக் குறைந்தது.மேலும் குவைத்தில் பிறந்துள்ள வெளிநாட்டினர் குழந்தைகளின் எண்ணிக்கை 4.69 சதவீதம் குறைந்து 2020-ல் 19,114 ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த 2019-ல் 20,056 ஆக இருந்தது எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.