குவைத்தின் இந்திய தூதரத்தின் கீழ் இயங்கிய வருகின்ற 3 கிளை பாஸ்போட் அலுவலகங்களின் வேலை நேரத்தில் மாற்றம்;ஊரடங்கு காரணமாக இந்த புதிய முடிவு
Image : கிளை அலுவலகம்
குவைத் இந்திய தூதரத்தின் கீழ் இயங்கிய வருகின்ற 3 கிளை பாஸ்போட் அலுவல்கள் வேலை நேரத்தில் மாற்றம்
குவைத்தில் நாளை(07/03/21) முதல் பகுதிநேர ஊரடங்கு நடைமுறையில் வருகின்ற நிலையில் Sharq,Fahaheel மற்றும் Abbasiya ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரத்தின் மூன்று கிளை தூதரக மையங்களில்(சிகேஜிஎஸ்) பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து ஊரடங்கு நாட்களில் இந்த மூன்று அலுவலகங்களின் சேவைகள் மற்றொரு அறிவிப்பு வெளிதாகும் வரையில் சனி முதல் வியாழக்கிழமை வரையில் காலை 07:30 முதல் 3:30 மாலை வரையில் இயக்கத்தில் இருக்கும்.தினமும் 3:00 மணிக்கு உள்நுழைவு தொடர்பான கடைசி டோக்கன் வழங்கப்படும் எனவும், எனவே சேவைகள் பெற வருகின்ற இந்தியர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை எப்போதும் போல் பொது விடுமுறையாக இருக்கும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடைய குவைத் இந்திய தூதரகம் கொரோனா முன்னெச்சரிக்கை அடிப்டையில் வருகின்ற மார்ச்-11,2021 வரையில் தற்காலிக மூடப்பட்டுள்ளது யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவசரகால தூதரக சேவைகளுக்கான உங்கள் கோரிக்கையினை cons1.kuwait@mea.gov.in என்ற இந்திய தூதரக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.