குவைத் இந்திய தூதரகம் சுகாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்காலிகமாக 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குவைத் இந்திய தூதரகம் சுகாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்காலிகமாக 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும்
குவைத் இந்திய தூதரகம் COVID-19 தொடர்பான முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக மார்ச் 02,2021 முதல் மார்ச் 04, 2021 வரை தற்காலிகமாக தூதரகம் மூடப்பட்டிருக்கும். இருந்தாலும்கூட அவசரகால அடிப்படையிலான தூதரக சேவைகள் முன் அனுமதி அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும். அவசரகால தூதரக சேவைகளுக்கான உங்கள் கோரிக்கையினை தயவுசெய்து cons1.kuwait@mea.gov.in என்ற இந்திய தூதரக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image : Indian Embassy Press Release
ஆனால் குவைத்தில் Sharq,Fahaheel மற்றும் Abbasiya ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரத்தின் மூன்று கிளை தூதரக மையங்கள் மூலம் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். இதுபோல் இந்திய தூதரகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ள மார்ச்-2021 மாதத்துக்கான நிகழ்வுகள் அனைத்தும் மற்றொரு அறிவிப்பு வெளிதாகும் வரையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.