குவைத் இந்திய தூதரகத்தின் வேலை நேரத்தில் மாற்றம்;கொரோனா பரவல் காரணமாக நடவடிக்கை இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Image : Kuwait Indian Embassy
குவைத் இந்திய தூதரகத்தின் வேலை நேரத்தில் மாற்றம்;கொரோனா பரவல் காரணமாக நடவடிக்கை
குவைத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் தொடர்ந்நு உயர்ந்து வரும் சூழ்நிலையில் கடந்த மார்ச்-4,2021 தேதி முதல் குவைத் சுகாதாரத்துறையின் அறிவுத்தல் அடிப்படையில் இன்று(11/03/21) வரையில் தூதரகம் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது. அவசரகால சேவைகள் மட்டுமே இந்த நாடுகளில் வழங்கப்பட்டது. இதையடுத்து நாளை(12/03/21) முதல் தூதரகம் திறக்கப்பட உள்ள நிலையில்,தூதரகம் சேவைகளுக்கான நேரங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக திருத்தப்பட்ட நேரத்தின்படி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்தியர்களுக்கு தூதரகம் சார்ந்த சேவைகள் கிடைக்கும். தினமும் கடைசி சேவைக்கான டோக்கன் மதியம் 12.30 மணிக்கு வழங்கப்படும். இந்த நாடைமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான வேலை நாட்களில் மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் நடைமுறையில் இருக்கும். மேலும் அவசரகால தூதரக சேவைகள் எப்போதும் போல் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தூதரகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.