குவைத் வரும் பயணிகளின் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழின் நம்பகத்தன்மை MUNA அமைப்பு மூலம் சோதனை செய்யபடும் என்ற தகவல் வெளியாகியுள்ளன
குவைத் வரும் பயணிகளின் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழின் நம்பகத்தன்மை MUNA அமைப்பு மூலம் சோதனை செய்யபடும்
குவைத்திற்கு வருகின்ற வெளிநாட்டினர் கொண்டு வருகின்ற கொரோனா எதிர்மறை பி.சி.ஆர் சான்றிதழ்களில் உள்ள மோசடிகளை தடுக்கும் நோக்கில் குவைத் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நவீன வசதியினை "MUNA" அமைப்புடன் இணைந்து, இதன் செயல்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக இந்தியா,இலங்கை உட்பட 15 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட Laboratory-களை MUNA அமைப்புடன் இணைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
MUNA அமைப்புடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள 15 நாடுகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், அமீரகம், துருக்கி, கத்தார், ஓமான், சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், யு.கே, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளின் ஆய்வகங்கள்(Laboratory) இணைக்கப்பட்டுள்ளது எனவும். MUNA அமைப்பு மூலம குவைத்திற்கு வெளியே உள்ள ஆய்வகங்களை தணிக்கை செய்யவும். அவைகள் வழங்குகின்ற பி.சி.ஆர் சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் விதத்திலும் அதிகாரிகள் அத்தகைய அமைப்பை தயார் செய்துள்ளனர். இதன் மூலம், பிற நாடுகளிலிருந்து குவைத்துக்கு வருபவர்களுக்கு புறப்படுவதற்கு முன்பு எடுக்க வேண்டிய பி.சி.ஆர் பரிசோதனை MUNA அமைப்பு மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.