சவுதியை தொடர்ந்து, தரம் இல்லை என்று இந்த மருந்துகளை குவைத்தும் தடை செய்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரி தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image:டாக்டர் அப்துல்லா அல் பத்ர்
சவுதியை தொடர்ந்து, தரம் இல்லை என்று இந்த மருந்துகளை குவைத்தும் தடை செய்துள்ளதாக அறிவிப்பு
குவைத்தில் மக்கள் பயன்படுத்தும் புரோட்டான் 20 மி.கி மற்றும் 40 மி.கி மாத்திரைகளை தரம் குறைவாக இருப்பதால் திரும்பப் பெற சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நெஞ்செரிச்சல்(வாயு தொல்லை), இரைப்பையில் உள்ள நீர்க்கட்டி மற்றும் வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கு பயன்படுத்தும் மாத்திரை இதுவாகும். புரோட்டான் என்ற இந்த தயாரிப்பு சவுதி அரேபியாவில் உள்ள ஸ்பிமாகோவின் நிறுவன தயாரிப்பு ஆகும்.
தரத்திற்கான ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் புரோட்டானை திரும்பப் பெற சவுதி அரேபியா முன்பு முடிவு செய்திருந்தது. இந்த சூழலில் குவைத்திலும் தடை விதிக்கப்படுகிறது என்று குவைத் சுகாதார அமைச்சகத்தின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு பிரிவின் செயலாளர் டாக்டர் அப்துல்லா அல் பத்ர் தெரிவித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.