குவைத் உள்துறை வானிலை மாற்றம் குறித்து சற்றுமுன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது; உதவிகளுக்கும் அவசரகால எண் 112 அழைக்கவும்
Image: மாதிரி புகைப்படம்
குவைத் உள்துறை வானிலை மாற்றம் குறித்து சற்றுமுன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
நாட்டின் வானிலையின் உறுதியற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் (MOI) அழைப்பு விடுத்துள்ளது. அவசரகால பாதுகாப்பு தொடர்பான உதவிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான உதவிகளுக்கும் அவசரகால எண் 112 அழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வனிலை மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் நாட்டில்,சில நேரங்களில் இடியுடன் கூடிய சிறிய மழை மற்றும் மணிநேரத்திற்கு 50 கி.மீ வேகத்திற்கும் அதிகமான காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், சில பகுதிகளில் காற்று கிடைமட்டத்தன்மை அடையவும், கடலில் அலைகள் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.