குவைத் மற்றும் ஈராக்குக்கும் இடையிலான போரில் கடத்தி செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image:ஒப்படைக்கப்பட்ட பொருட்கள்
குவைத் போரின் போது கடத்தி செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டது
குவைத் மற்றும் ஈராக்குக்கும் இடையிலான போரின் போது குவைத்திலிருந்து கடத்தப்பட்ட வரலாற்று ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை ஈராக் திருப்பி அனுப்பியுள்ளது. அந்நாட்டிடம் இருந்து மூன்றாவது முறையாக இப்படிப்பட்ட பொருட்களை குவைத் திருப்பி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1990 சதாம் தலைமையிலான படையெடுப்பின் போது கைப்பற்றப்பட்ட 8 டன் அளவிலான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டதாக இரு நாடுகளின் பிரதிநிதிகளையும் மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் குவைத் பல்கலைக்கழகம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஆவணங்கள் உள்ளிடவை அடங்கியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கையை குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நாசர் அல் ஹெய்ன் வரவேற்றார். மேலும் இரு நாடுகளும் பரஸ்பர புரிந்துணர்வுடன் முன்னோக்கி செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பான ஈராக் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், முன்னர் குவைத் இழந்த பொருட்களின் பட்டியல் குவைத் அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அதன்படி இப்படிப்பட்ட குவைத் இழந்த பொருட்கள் திருப்பி அனுப்பப்படுகிறது என்று கூறினார். அதுபோல் குவைத் எல்லைக்குட்பட்ட போபியன் தீவில் ஒரு ஈராக் ராணுவ வீரரின் உடலின் எச்சங்களை(போரில் இறந்து சிதைந்த பாகங்கள்) கண்டுபிடிக்க நிலையில் உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும், ஈராக் ராணுவ வீரனின் எச்சங்கள் ஈராக் தூதுக்குழுவிடம் ஒப்படைப்பதாகவும் ஹெய்ன் கூறினார். சதாம் உசேன் தலைமையிலான ஈராக் படைகள் ஆகஸ்ட் 2, 1990 அன்று குவைத் மீது படையெடுத்தன. அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி படை அவர்களை வெளியேற்றப்படுவதற்கு முன்னர் ஏழு மாதங்கள் ஈராக் ஆட்சியின் கீழ் குவைத் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.