குவைத்தின் கைத்தான் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த 19 தொழிலாளர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்
Image credit: Arrested Workers
குவைத்தின் கைத்தான் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 தொழிலாளர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்
குவைத்தின் கைத்தான் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19 பேரை பாதுகாப்புப் படையினர் இன்று(10/03/21) கைது செய்தனர் என்று உள்துறை அமைச்சக ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது . சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியான ஒரு வீடியோவில், ஒரு கூட்டம் வெளிநாட்டவர்கள் சூதாட்டம் மற்றும் பந்தயம் செய்கிற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து குவைத் குடிவரவு துறை விசாரணையின் பொது அந்த இடம் கைத்தான் பகுதி என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து இந்த கூட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு தகவல் சரிபார்க்கப்பட்டு, சட்ட அனுமதி பெற்று, அபார்ட்மெண்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19 பேர் பிடிபட்டனர். மேலும் அதிகாரிகள் சூதாட்டம் செய்ய பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க தகுதிவாய்ந்தவை எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இவர்கள் கூடுதல் நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர் எனவும் உள்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.