குவைத்தின் MUNA அமைப்புடன் இணைக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை ஆய்வகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது;17 ஆய்வகங்கள் இந்தியாவில் உள்ளன
குவைத்தின் MUNA அமைப்புடன் இணைக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை ஆய்வகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது
குவைத்தில் வரும் பயணிகள் முனா அமைப்பு மூலம் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் சரிபார்த்து மட்டுமே நாட்டில் நுழைய முடியும். மார்ச்-25 முதல் புதிய விதிமுறை நடைமுறையில் வருகின்றது என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் முதல்கட்டமாக இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், அமீரகம், நேபாளம், பங்காளதேஷ், பஹ்ரைன்,துருக்கி ஆகிய நாட்டினர் மார்ச்-25 முதல் முனா அமைப்புடன் இணைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை சான்றிதழ்கள் பெற்று குவைத்தில் நுழைய முடியும் என்று அறிவுத்திருந்தி இருந்த நிலையில் முனா(MUNA) அமைப்புடன் இணைக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை ஆய்வகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் சில நாடுகளில் பி.சி.ஆர் சான்றிதழ்கள் Medical Utility Network Accreditor(MUNA) அமைப்புடன் இணைக்கப்படும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குவைத் விமான இயக்குநரகம் ஜெனரல் அறிவித்துள்ளது. அதன்படி கத்தார் மற்றும் ஓமானுக்கு மார்ச் 27 அன்று முதலும், சவுதி அரேபியாவுக்கு மார்ச் 28 அன்று முதலும், ஜோர்டான், யு.கே, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மார்ச் 29 முதலும், எகிப்துக்கு மார்ச்-30 முதலும் முனா(MUNA) அமைப்புடன் இணைக்கப்பட்ட புதிய விதிமுறை நடைமுறையில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் 26 நகரங்களில் உள்ள பி.சி.ஆர் சோதனை ஆய்வகங்கள் 'முனா' அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அவைகளின் 17 ஆய்வகங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் உள்ள ஆய்வகங்களின் பட்டியல் Metropolis Healthcare Laboratory கோழிக்கோடு, கண்ணூர், கொச்சி, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, கோவா மற்றும் Suburban Diagnostics Laboratory மும்பை, நவி-மும்பை, புனே மற்றும் Technologies Limited Laboratory குருகிராம், நொய்டா, ஹைதராபாத் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
Srilankan-யில் கொழும்பு, நெகம்போ, கம்பாஹா, கண்டி மற்றும் கரேத்தியா ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்களிளும்
Philippines-யில் Quezon City High Acquisition Diagnostic Center, Pace City Diagnostic Laboratory (Philippines Airport)
Nepal-யில் Advanced Medicine and Surgery Hospital in Kathmandu
Bangladesh-யில் Pigeon Health Laboratory in Dhaka
மேலும் தற்போதைய பட்டியலில் புதிதாக மேலும் கூடுதல் இடங்களில் உள்ள ஆய்வகங்களின் பெயர்கள் இடம்பெறுமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.