ஓமானில் வெளிநாட்டவர்களுக்கு பின்னடைவு;மேலும் பல துறைகளில் குடிமக்களை வேலைக்கு அமர்த்த முடிவு;ஜூலை முதல் நடைமுறைப்படுத்த முடிவு
Image:Beautiful Oman
ஓமானில் வெளிநாட்டவர்களுக்கு பின்னடைவு;மேலும் பல துறைகளில் குடிமக்களை வேலைக்கு அமர்த்த முடிவு
ஓமானில் மேலும் பல துறைகளில் உள்ள குறிபிட்ட சில பதவிகளில் குடிமக்களுக்காக மட்டுப்படுத்த தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பண பரிவர்த்தனை மையங்களில் Sale, According, Storekeeper மற்றும் காசாளர் வேலைகள், இதுபோல் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள நிர்வாக(Administration) வேலைகள் குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,மால்களில் உள்ள வேறு சில பதவிகள் குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
வணிக வளாகத்தில் உள்ள பதவிகளில் குடிமக்களை வேலைக்கு அமரத்துவம் நடவடிக்கைகள் ஜூலை-20, 2021 முதல் நடைமுறைக்கு வரும். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும், தற்போது குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளில் பணிபுரியும் வெளிநாட்டினரின் பதவிகாலம் முடியும் முறைக்கு,பணி அனுமதி(Work Permit) காலாவதியான பிறகு புதுப்பிக்கப்படாது என்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.