குவைத்தில் 4 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது;ஜூன் தொடங்கி வெளிநாட்டினருக்கு தடுப்பூசி போடப்படும்
Image : குவைத் தடுப்பூசி மையம்
குவைத்தில் 4 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
குவைத்தில் கோவிட் தடுப்பூசி 4,01,000 பேருக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஃபைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் குடிமக்கள் மற்றும் முன்நிரையில் உள்ள வெளிநாட்டினருக்கும் வழங்கப்படுகின்றன. இதுவரை, நாட்டின் மக்கள் தொகையில் 9.3% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப குழுக்கள் உலகளவில் தடுப்பூசிகள் தொடர்பான முன்னேற்றங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு FDA மற்றும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றால் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளே நாட்டில் விநியோகிக்க படுகின்றன எனவும் ஜான்சன் மற்றும் ஜான்சன்-6 தடுப்பூசி பற்றிய தகவல்களை சேகரித்ததாகவும், தொழில்நுட்பக் குழு பாதுகாப்பு,செயல்திறன் மற்றும் தரம் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து வருவதாகவும் சுகாதரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடைய குவைத்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஜூன் மாதத்தில் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி போடுவது முடிக்கப்படலாம் என்றும், செப்டம்பர் காலக்கெடுவுக்குப் பிறகு தடுப்பூசி போடாவிட்டால் விசா புதுப்பிக்க முடியாது என்ற விதிமுறை அமல்படுத்த திட்டம் உள்ளதாகவும், இதற்காக முன்மொழிவு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும்,முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பத்தகுந்த ஆதரங்களை மேற்கொள் காட்டி குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.