குவைத்தில் ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்ப பயணிகள் விமான நிலையம் செல்வதில் எந்த பிரச்சனை இல்லை;முன்கூட்டியே விமான நிலையம் சென்று காத்திருக்க தேவையில்லை
Image : Kuwait Police Checking
குவைத்தில் ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்ப பயணிகள் விமான நிலையம் செல்வதில் எந்த பிரச்சனை இல்லை
குவைத்தில் தற்போது பகுதிநேர ஊரடங்கு மாலை 05:00 pm அதிகாலை 05:00 am வரை நடைமுறையில் உள்ளது அனைவரும் அறிந்ததை,ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்புவதற்கான குவைத் சர்வதேச விமான நிலையம் செல்லும் நபர்களுக்கு ஊரடங்கு மூலம் எந்த பிரச்சினையும், ஆனால் இந்த நேரத்தில் விமான நிலையம் செல்லும் பயணிகள் உங்களின் விமான பயணச்சீட்டு நகல்களை எடுத்து கைவசம் வைத்திருங்கள் சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் சோதனையின் போது விமான பயணச்சீட்டை காட்ட வேண்டும், ஊரடங்குக்கு முன்பாக முன்கூட்டியே விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை,மேலும் உங்களின் விமான பயணச்சீட்டின் இன்னோரு நகலை உங்கள் ஓட்டுநரிடம் கொடுங்கள், இதனால் அவர் எந்த பிரச்சினையும் இல்லாமல் விமான நிலையத்தில் இருந்து திரும்பி வரலாம். பலருக்கும் உள்ள இந்த சந்தேகத்தில் இப்போது தெளிவு வந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
மேலும் தாயகம் செல்லும் நேரத்தில் விமான நிலையங்களில்(குவைத் மற்றும் இந்தியாவில்) சமர்ப்பிக்க வேண்டிய 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கவேண்டிய பி.சி.ஆர் பரிசோதனை ஊரடங்கு இல்லாத பகல் நேரங்களில் மருத்துவமனைக்கு சென்று எடுங்கள். அதுபோல் திடிரென ஏற்படும முதலுதவி(First aid), உடல் பரிசோதனை(Medical checkup), குருதித்தானம்(Blood donation),கொரோனா பரிசோதனை மாதிரி வழங்குதல் அல்லது தடுப்பூசி எடுப்பதற்காக( Covid-19 swab or getting vaccinated against Covid-19) ஆகிய 5 பிரிவுகளில் உள்ள நபர்களுக்கு ஊரடங்கு நேரத்தில் அதிகபட்சமாக 2 மணிநேரம் வரையில் வெளியை செல்ல அனுமதி வழங்கபடும்.உங்கள் பெயர்,சிவில் ஐடி எண்,வாகன எண்,செல்லும் இடம்(Location) உள்ளிட்ட அடிப்படையான தகவல்களை கொடுத்து பதிவு செய்ய அனுமதி பெறலாம். ஆனால் இந்த அவசரகால தேவைக்காக அனுமதியை தவறான வழியில் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என்பது குறி்ப்பிடத்தக்கது. அனுமதி பெற பதிவு செய்ய வேண்டிய அதிகாரப்பூர்வ தளத்தின் Link : https://curfew.paci.gov.kw/request/create