ஓமான் ஏர் நிறுவனம் சவுதிக்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது;அதேநேரம் துபாய் சேவைகள் பல ரத்து செய்யப்பட்டது
Image credit: Oman Air
ஓமான் ஏர் நிறுவனம் சவுதிக்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது
ஓமானில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவுதி அரேபியாவுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்கியுள்ளதாக ஓமான் ஏர் அறிவித்துள்ளது. ரியாத் சேவைகள் வருகின்ற ஏப்ரல்-1 வியாழக்கிழமை முதல் தொடங்கும். மஸ்கட்டில் இருந்து ரியாத்துக்கு வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அதே நேரத்தில் தமாமுக்கு இயக்கப்படும் நேற்றைய தினம் முதல் தொடங்கியுள்ளதாகவும், வாரத்திற்கு 4 முறை விமானங்கள் இயக்கப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் மஸ்கட் மற்றும் துபாய் இடையே பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதை சிவில் ஏவியேஷன் ஆணையம் அறிவித்தது. சேவைகள் ஏன் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து சரியான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடவில்லை. முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் பணம் Refund செய்து கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.